வியாழன், 18 மே, 2017

நாய் வேலைய நாய் பார்க்கோணும் !! கழுத வேலைய கழுத பார்க்கோணும் !!




கேள்வி !! பதில் !! பகுதி இது !!

நாய் வேலைய நாய் பார்க்கோணும் !!
கழுத வேலைய கழுத பார்க்கோணும் !!

கேள்வி :-
திரு. அறிவற்ற தமிழன்.
அணைக்கரைப்பட்டி.

ஐயா !!
வணக்கம்.தமிழ்த்திரை உலகின் சூப்பர்ஸ்டார்
இத்தனை வயதிற்குப் பிறகு அரசியலில் தாம் 
உள்ளே நுழையப் போவதாக, சொல்லி உள்ளது 
பற்றி தங்கள் கருத்து என்ன ?
பதில்:-
திரு அனைக்கரைப் பட்டி ஐயா, வணக்கம். 
தங்களுக்கே தெரியவில்லையா ஒரு தவறுகள் 
மட்டுமே நிறைந்துள்ள ஒரு செயல் பற்றி என்னிடம் 
தாங்கள் கேள்வி கேட்கிறோம் என உங்கள் மனசாட்சி 
உங்களை உறுத்திடவில்லையா ? எனது தந்தை 
நான் சின்னஞ்சிறுவனாக இருந்த போது சொன்ன 
கருத்து இப்போது எனது நினைவின்பால் வருகுது.
அவர் சொல்வார் :-

நாய் வேலைய நாய் பார்க்கோணும் !!
கழுத வேலைய கழுத பார்க்கோணும் !!

ரஜினிகாந்த் ஒரு சினிமா நடிகர். நடிப்புத் தொழிலுடன் 
அவர் நின்று கொண்டால், அது அவருக்கு நல்லது.
ஏற்கனவே நமது தமிழ்நாடு ஒரு புரட்டு நடிகரிடம் 
13 ஆண்டுகளும், அதன் பிறகு அவரது ஆசை நாயகியிடம் 
கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இவர்கள் இருவரிடமும் 
ஆளும் பொறுப்பை நல்கிய தமிழகம் இன்று எந்த 
நிலையில் இருக்கிறது என்பது உலகறிந்த விஷயம்.
மீண்டும் அதே தவறை செய்துவிடாதீர்கள் என்று 
உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
அவர் நடிகர். நடிப்புத் தொழிலோடு நின்றால் அவருக்கு 
நல்லது. இதுவரை தமிழனை, ( தமிழ்நாட்டினில் 
பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளதை ) அவனது பணத்தை சம்பாரித்து அதன் மூலமாக கர்னாடக/மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த ஒருவர் தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு அதாவது அரசியல் கட்சி துவக்கிட வைத்திடும் அளவுக்கு அவரது பின்புறம் இருந்து அவரை ஆட்டிப் படைக்கும், ஆதிக்க சக்தி யார் ? என்பது முதலில் தெரிந்திட வேண்டும். இப்படி சம்பாரித்த சொத்துக்களை 
பாதுகாத்திட, ஒருவேளை அவருக்கு அரசியல் ஆதரவு 
வேண்டும் என்று கருதுகிறாரோ தெரியவில்லை.ஆனால் 
இந்த அறிவுரையையும் மீறி அவர் ஒருவேளை அரசியலில் 
உள்ளே நுழைந்தால், பாவம் அவர். சேர்த்து வைத்த அத்தனை 
சொத்துக்களும் கரைந்து காணாமல் போய்விடுவார். இவர் 
நேர்மையாக, நியாயமாக,தர்மத்தின் அடிப்படையில் மட்டுமே 
அரசியல் செய்திடப்போவதாக அவர் அறிவித்துள்ள அந்த 
அறிவிப்பு, அறிவற்றவர்களை வேண்டுமானால் கைதட்டி 
வரவேற்று ஆரவாரம் செய்திடச் செய்யலாம். ஆனால் 
இன்றைய அரசியல் மேற்சொன்ன அனைத்து விஷயங்களுக்கும் 
முற்றிலும் எதிரானதே நடக்குது இந்த தாழ்ந்த தமிழ்நாட்டிலே.
திரு. ரஜினி அவர்களைப்பார்த்து பரிதாபப் படுவதைத் தவிர 
எனக்கு வேறு வழி தெரியவில்லை.

நன்றி. வணக்கம்.

அன்புடன். 
கவிஞர். மதுரை. TR.பாலு.


செவ்வாய், 20 செப்டம்பர், 2016

கேள்வி மற்றும் பதில் இவை இரண்டுமே என்னுடையதுதான் !!





                கேள்வியும் பதிலும் !!



திரு. A. விக்னேஸ்வரன்,விருதுநகர்.

கேள்வி :- ஐயா இப்ப வரவர அம்மையார் 
ஒரே தாராளமயமாக உதவிகளையும் 
நலத்திட்டங்களையும் அள்ளி அள்ளி 
வீசுராங்களே ? என்ன விசயமா இருக்கும் ?

பதில் :-  எல்லாம் உள்ளாட்சிகளுக்கு இங்கே 
தேர்தல் வர இருப்பதை உத்தேசித்தே அள்ளி 
அள்ளி வீசுறாங்க. எல்லாம் கடன்தானே.
மாமியார் சேலைய மருமகன் தானம் கொடுத்தா 
நட்டம் மாமனாருக்குத்தானே. இந்த பொம்பள 
ஒரு பைசா கையிலே இருந்து தரப்போவது  
கிடையாது. எல்லாம் மக்கள் தலை மேலேதான் 
கடன் சுமை எறப்போவுது. அப்பாலே ஜெயிச்சு 
வந்தவுடனே இன்னும் பல்லாயிரம் கோடிகள்
கொள்ளை அடிச்சு குவிக்கப் போடுகின்ற 
திட்டம்தானே அன்றி வேற என்ன இருக்கு 
இந்த வெட்டி அறிவிப்புகளாலே ?

திருமதி. B.  பெஞ்சமின் சுதா.
பெங்களூரு.

கேள்வி :-  காவிரி பிரச்சினையில் இந்த பொம்பள கர்நாடகாவை பழி வாங்கியது உண்மையா ?

பதில் :-  அதில் என்ன சந்தேகம். தன் மீது உள்ள 
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து நீதியற்ற 
அரசர் குமாரசாமி விடுதலை செய்த நிலையில்,
உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக அரசாங்கம் மேல் 
முறையீடு செய்து  மீண்டும் காராக்கிரகத்தில் 
( ஜெயிலில்) தள்ளிடும் முயற்சியில் ஈடுபட்ட 
காரணத்தால் அதை எப்படி பழிவாங்குவது என்று தீர,ஆற,அமர, யோசித்து, அதனால் ஏற்பட்ட ஞானத்தால், ஜூன் மாதத்திலேயே உச்சநீதி மன்றத்தில் காவிரி நீர் கேட்டு மனு செய்திடாமல் (அப்போது கர்நாடக அணைகளில் நீர் நிரம்ப இருந்தது) வேண்டுமென்றே காலம் தாழ்த்தி,தற்போது வழக்கு போட்ட காரணத்தால் அங்கே கலவர பூமியாக மாறிட பிள்ளையார்சுழி போட்ட பெருமை இந்த பொம்பளைய மட்டுமே சேரும்.எது எப்படியோ, தன்னை சிக்கலில் மாட்டி விட்ட கர்நாடக அரசாங்கம் நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டி செயல் பட்ட இந்த பொம்பள அநியாயம், அக்கிரமம் இவைகளின் ஒட்டுமொத்த குத்தைகைதாரி என்பதில் யாருக்கும் ஐயமில்லை என்று அரசியல் ஆர்வலர்கள் பேசுகிறார்கள். எல்லாவற்றிற்கும் காலம் நிச்சயம் பதில் சொல்லும். அப்போது இங்கே யார் வெளியில் இருப்பார் யார் உள்ளே (ஜெயிலில்) போவார் என்பது நமக்குத் தெரியவரும். 

நன்றி !! வணக்கம் !! அன்பு நேயர்களே !!

அன்புடன். மதுரை. TR.பாலு.

சனி, 20 ஆகஸ்ட், 2016

கேள்வியும் நானே !! பதிலும் எனதே !!





கேள்வி, பதில் இரண்டும் என்னுடையதுதான் !!




திரு. S. சாம்பசிவம்,சாத்தூர்.

கேள்வி :-  ஐயா ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில், இறுதி வரை சென்று அதில் வெள்ளிப்பதக்கம் வாங்கிய செல்வி. PV.சிந்துவை பாராட்டி, இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் பாராட்டி மகிழ்ந்திடும்போது இங்கே உள்ள மாநில முதல்வர் மட்டும் ஏன் வாய்மூடி மௌனியாக உள்ளார் ?

பதில் :-  உங்களுக்கு விஷயமே தெரியாதா?எல்லாம் அரசியல்தான். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருந்த இறகு பந்து போட்டியில், இதே PV.சிந்து Chennai Smashers என்ற அணியில் விளையாட இருந்த நிலையில், அவருக்கு விஜயகாந்த் மகன் ஸ்பான்சர் செய்திட உள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த போட்டியையே இங்கு நடைபெற விடாமல் தடுத்து நிறுத்திய மகராசி அல்லவா நாம் பெற்றுள்ள முதல்வர்.அப்புறம் இவர் எப்படி பாராட்டுவார் ? எல்லாம் நாம் செய்த பூர்வ ஜென்ம கர்மா தான். வெட்கக்கேடு. கேவலம், கேடுகெட்ட அயோக்கியத்தனம் நிறைந்த பிச்சைக்காரத்தனம் மட்டுமே குடிகொண்டுள்ள மனம் அது. அதில் இருந்து எப்படி பாராட்டி மகிழ்ந்திடும் மனத்தை நீங்கள் எதிர்பார்க்க முடியும் ?என்ன..நான்..சொல்றது ?


திருமதி. O. பஞ்சவர்ணம் பழனி.

கேள்வி :-  ஐயா  உச்ச நீதி மன்றத்தில் இருந்து இன்னும் தீர்ப்பு வெளிவராமல் இருக்கிறதே ?என்ன காரணம் ?

பதில் :-  அம்மா ஈட்டி எட்டிய வரை மட்டுமே பாய்ந்திடும். ஆனால், பணம் ? பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா என்ன ? போதாக்குறைக்கு வணிக பங்குதாரர் மத்திய அரசில்பெரும் பதவியில் இருக்கும் தாடியின் ஆதரவும் உள்ளது. அப்புறம் எப்டிங்க விரைவில் நீதி கிடைக்கும்? எல்லாமே இந்த நாட்டில் பணத்துக்கு அப்புறம்தான் நீதி, நேர்மை,நியாயம்,உண்மை எல்லாம். ஆண்டவன்தான் கூடிய விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

செல்வி. K. ராதாராணி,ராயபுரம்.

கேள்வி :ஐயாஆளும்கட்சிதேர்தல்அறிக்கையில் உறுதி அளித்த ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி மற்றும் ஆவின் பால் லிட்டர் ஒன்று ரூபாய் 25/=க்கு இவை எல்லாம் எப்போது நமக்கு கிடைக்கும் ?

பதில் :-  நிச்சயம் கிடைக்கும். எப்போது என்று கேட்டால் அது கேப்பையில் எப்போது இங்கே  நெய் வடிகின்றதோ அப்போது. உடனே நீங்கள் சென்று அதை வாங்கிக்கொள்ளலாம். அட..போங்கம்மா..நீங்க..ஒன்னு..உலகம் புரியாத பொண்ணா இருக்கீங்களே. எல்லாம் தேர்தல் நேரத்துலே சொல்றதுதான். சொல்லுவதை எல்லாம் செய்வதற்கு அந்த கட்சி என்ன திமுகவா?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு.


சனி, 30 ஜூலை, 2016

எனது கேள்வியும் எனது பதிலும் !!





திரு. S. பரசுராமன்,பள்ளபட்டி.

கேள்வி :-  ஐயா தற்போது தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பற்றி தங்களது கருத்து ?

பதில் :-  குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.தில்லு முல்லு செய்து தேர்தலில் பெற்ற வெற்றியால், ஆளும் தலைமை இங்கே அமர்ந்து உள்ளது ஆட்சி பீடத்தில். எப்படி எத்தனை ஆண்டுகள் கட்டை வைத்துக் கட்டினாலும் நாய் வால் நிமிர்ந்த நிலை அடையாதோ, அதுபோல இங்கே திமிர் பிடித்த குணமும் மாறாது. பாவம் மக்கள்.

திருமதி. K. சுப்புலட்சுமி.சுப்புலாபுரம்.

கேள்வி :-  ஐயா தேர்தல் வாக்குறுதியில் இப்போது ஆளும்கட்சி சொன்ன ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்கூட்டி எப்போது மகளிர்க்கு கிடைக்கும் ?

பதில் :-  அத்தைக்கு மீசை முளைத்தவுடன் நிச்சயம் கிடைக்கும். காரியம் முடியும்வரை காலைப்பிடி. காரியம் முடிந்தபிறகு காலில் இருப்பதை (செருப்பு) கழட்டி அடி என்ற பழமொழிதான் எனது நினைவுக்கு வருது.

திரு. O. ஆறுமுகம்.ஆண்டிபட்டி.

கேள்வி :-  எதிர்கட்சித்தலைவர் தளபதிக்குசட்டப்பேரவைத் தலைவர் சரியாக மதிப்பு தருவதாகத் தெரியவில்லையே ?

பதில் :-  அவர் பொம்மைதான். சாவி யாரிடம் இருக்கிறது என்பது ஊருக்கே தெரியும்.அது என்ன சொல்லுதோ அதன்படி மட்டுமே இவர் செயல்பட முடியும். இருந்தாலும் தமிழக மக்கள் தலையில் இறைவன் இப்படி கொடுமை நிறைந்திட்ட எழுத்துக்களை எழுதியிருக்கக் கூடாது. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

செல்வி. J. ஜெயக்குமாரி.ஜெகதாபட்டினம்.

கேள்வி :-   தமிழ்நாட்டின் கடன்சுமை எப்போது குறையும் ?

பதில்  :-  அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். இந்த ஆட்சி இருக்கும்வரை பவுர்ணமி நோக்கி செல்கின்ற நிலவு எப்படி வளர்ந்துகொண்டே இருக்கிறதோ, அதுபோல அதிகரித்துக்கொண்டு மட்டும்தான் இருக்கும்.குறைவதற்கு வாய்ப்பு என்பது கிஞ்சித்தும் கிடையாது. ஏனென்றால் அப்படி அறிவுஜீவிகள் ஆளும் பொறுப்பில் உள்ளனர். யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே. அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே என்ற பாடல்தான் எனது நினைவுக்கு வருகிறது.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு. 


வெள்ளி, 13 மே, 2016

கேள்வியும் நானே !! பதிலும் எனதே !!





திரு. P. புருஷோத்தமன்.புதுக்கோட்டை

கேள்வி :- நடிகர் விஜயகாந்த்தின் நிலை 2011 மற்றும் 2016 இரண்டையும் ஒப்பிடுக.

பதில் :- அப்போது அம்மையாரிடம் அவர் நேரிடையாக பெற்றுக்கொண்டார் பல நூறு கோடிகளை. தற்போதும் அதே செயல்.ஆனால் இப்போது அவர் அம்மையாரின் பணத்தை அரசியல் புரோக்கர் கோவாலு மூலமாக பெற்றுக்கொண்டார். அவ்வளவேவேறுபாடு அல்லது வித்தியாசம். 

திருமதி. S. சரோஜா.சருகு வலையபட்டி.

கேள்வி :-  வரவர அம்மையாரின் சுருதி கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருவதன் காரணம் என்ன ?

பதில் :-  எல்லாம் தேர்தல் தோல்வி பயமும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் விளைவுமே காரணம். உப்பு தின்னால் தண்ணி குடிக்கணும்.தப்பு செஞ்சா தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும். என்ன...நான்..சொல்றது..சரிதானே ?

செல்வி. K. பிரவீணாபிள்ளையார்பட்டி.

கேள்வி :-  மக்கள் நலக் கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் சுமார் எத்தனைஇடங்கள்கிடைக்கும் ?

பதில் :-  உங்கள் கேள்வியே தவறு. அந்த மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணிக்கு எத்தனை இடங்களில் டெபாசிட் கிடைக்கும் என்று அல்லவா தாங்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

திரு. L. பலராமன்.பரமக்குடி.

கேள்வி :- தங்களின் கருத்துக்கணிப்பு இந்தத் தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும் ?

பதில் :-  எனது கணிப்பு இதோ :-

தி.மு.க. மற்றும் கூட்டணி  =  190.
அண்ணா தி.மு.க.    "     "       =    30.
இதர சில்லறை கட்சிகள்     =    14.

உண்மை முடிவுகள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். மதுரை T.R. பாலு. 

திங்கள், 25 ஏப்ரல், 2016

கேள்வி & பதில் இந்த இரண்டுமே என்னுடையதுதான் !!




திரு P. பச்சையப்பன்.பரமக்குடி.

கேள்வி :-  ஐயா மதிமுக தலைவர் வைகோ ஏன் தேர்தலில்நிற்காமல் ஜகா வாங்கி விட்டார் ?தங்களது விரிவான பதில் தேவை.

பதில் :-  விசயம் வேற ஒன்னும் இல்லை.எல்லாம் தோல்வி பயமே காரணம். மேலும் கமிசன் கட்சி ( கம்யூனிஸ்ட் கட்சி) கோட்டை அது. அதில் போடு ஓட்டை என்பது அம்மையின் (ஜெ) இரகசிய உத்தரவு. இந்த ஆளு கோவாலு ஒரு கைக்கூலிதானே அந்த அம்மாளுக்கு. கனகச்சிதமா சோலிய முடிச்சுப்புட்டாறு.வேற இதுல சொல்ல என்ன இருக்கு அந்த வெண்ணை வெட்டி சிப்பாய பத்தி பேச ?


திருமதி. V. வெள்ளையம்மாள்,வெள்ளக்கோவில்.

கேள்வி :-  தலைவர் கலைஞர் நேத்து வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதை ஏற்கும் அலுவலர் அமர்ந்துகொண்டு வாங்கினார்.(அதுதான் தேர்தல் ஆணையத்தின் உத்திரவும் கூட.) ஆனால் அதே நேரம் அம்மையார் நேற்று மனு தாக்கல் செய்யும்போது ஏற்கும் அலுவலர் எழுந்து நின்று,மரியாதையுடன், பயபக்தியோடு வாங்கியதன் மர்மம் என்ன ?

பதில் :- மர்மமாவது !! மண்ணாங்கட்டியாவது !!எல்லாமே அதிகார வர்கத்தின் ஆணவச் செயலே.அந்த அம்மையார் நின்று கொண்டு மனு தாக்கல் செய்யும் போது எதிரில் இருப்பவர் அமர்ந்து கொண்டு வாங்கினால், இந்த அம்மையின் மதிப்பு, மரியாதை (?) என்ன ஆவது. எல்லாம் முன்கூட்டியே உத்திரவு வந்துதான் அந்த RKநகர் தொகுதி தேர்தல் அலுவலர் நின்று கொண்டு மனுவைப் பெற்றதன் பின்னணியில் நடந்த விசயம். வேறு ஒரு எழவும் இல்லை. அந்த அம்மா அங்கே தோக்கப்போகுது. இதுல உக்காந்துகிட்டு வாங்கினா என்ன ? நின்னுகிட்டு வாங்கினா என்ன ?எல்லாம் ஒரு இழவுதானே. அட..என்ன..நான்.சொல்றது?

திரு. K. நீலமேகம்.நீலகிரி.

கேள்வி :-  மேடைக்கு மேடை, கூட்டத்துக்கு கூட்டம், ஏன் இந்த விஜயகாந்த் நாக்கை மடிச்சு கைய உசத்தி, ஏதோ ரவுடி மாதிரி நடந்துகிட்டு மேடை நாகரீகத்தை இப்படி கொலை செய்றாரு?

பதில் :-  பொதுவா,நாமஎப்டிவளர்கப்பட்டோமோ அப்டியேதான் நமதுநடவடிக்கைகளும்அமையும்.அவர் வளர்ந்த விதம் அப்படி. He has been brought-uplike that என்று எனது தந்தை அடிக்கடி சொல்லுவார்கள்.அதனாலே அவரை ரவுடி மாதிரி என்று சொல்லி அவரது மதிப்பை குறைக்க வேண்டாம். ஏன்னா அவரு அதேதான். அட..என்ன..நான்..சொல்றது ?

செல்வி. S. கருப்பாயி.கருமாத்தூர்.

கேள்வி :-  ஐயா. வணக்கம். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் தங்களது கண்ணோட்டத்தில் ? நல்ல பதிலாகச் சொல்லுங்கள்.

பதில் :- தங்களது கேள்வியில் இருந்தே தெரிகிறது.தாங்கள் விரும்புவது திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற விரும்புகிறீர்கள் என்று. உங்கள் எண்ணம்தான் முடிவுகளும் அப்படித்தான். யாரும் எதிர்பார்த்திராத வகையில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முதல்வர் நமது தலைவர் கலைஞர் அவர்கள்தான். மற்றவைஎல்லாம் ஆடிக்காத்தில் பறக்கும் எச்சில் இலைகள் போல பறந்து காணாமல் போய்விடும் தேர்தல்களத்தில்.


நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.


வியாழன், 24 மார்ச், 2016

கேள்வி & பதில் !! இவை இரண்டுமே என்னுடையதுதான் !!




அர்த்தம் நிறைந்த அரசியல் கேள்விகளும் !!
அதற்கு உண்டான பதில்களும் !! 

திரு A. ஆனந்தன்.ஆலங்குளம்.

கேள்வி :-  நடிகர் விஜயகாந்த் ம.ந.
கெடுக்கும் கூட்டணியில் இணைந்த 
போது வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் 
உட்பட அனைவரும் அதை பஞ்ச 
பாண்டவர் அணி என்று சொன்னார்கள்.
அப்படியென்றால் திரௌபதை யார் ?
விளக்கமான பதில் தேவை ஐயா !!

பதில் :- தங்களது கேள்வியின் உள்ளர்த்தம் 
எனக்குத் தெரிகிறது. இருந்தாலும் பதில் 
தருகிறேன். திரௌபதை என்று மகாபாரத 
கதையில் வந்த கதாபாத்திரம்தான் அந்தக் 
கதையின் திருப்புமுனைக்கு காரணமாக 
அமைந்திருந்தது. அதை இப்போது உள்ள 
சூழலுக்கு ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த 
இடத்தை பிரேமலதாவைத்தவிர வேறு 
எவராலும் நிரப்ப முடியாது. மகாபாரத 
கதையில் திரௌபதையின் ஆடையை 
அவிழ்த்து அவமானப் படுத்தியது துரியோவின் 
தம்பி துச்சாதனன். ஆனால் இங்கே நவீன 
பாஞ்சாலியை அப்படி யாரும் செய்ததாக 
செய்தி இதுவரையில் வரவில்லை. ஒருவேளை 
ஜெயா வேண்டுமானால் பிரேமாவின் தலை 
முடியை அகற்ற மனதிற்குள் நினைத்து 
இருக்கலாம்.

திருமதி. B. சுலோச்சனா.
சுப்புலாபுரம்.

கேள்வி :-  எதிர்வரும் தமிநாடு சட்டமன்றத் 
தேர்தலில் நடிகர் இணைந்த வைகோவின் 
துரோக அணி எத்தனை இடங்கள் பிடிக்கும் ?

பதில் :- கேள்வியே தவறு. எத்தனை இடங்கள் 
டெபாசிட் பெரும் என்று கேட்டிருக்க வேண்டும்.

செல்வி. C. ஜமுனாராணி.ஜக்கம்பட்டி.

கேள்வி :-  மூப்பனார் மகன் வாசன் ஏன் இன்னும் 
வாய்மூடி மௌனியாக இருக்கிறார். அவர் 
யாரோடு கூட்டு சேர உள்ளார். தகவல் தங்களுக்கு தெரிந்தால் தருக.
பதில் :-  அவர்பாடு மிகவும் கேவலமாகவே 
உள்ளது. யாரும் அவரைக் கண்டுகொள்ளவே 
இல்லை. இலைக்கட்சி ஒற்றை இலக்கில் இட 
ஒதுக்கீடு செய்வோம் அது தவிர இலைச் சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்று கண்டிஷன் வேறு. காங்கிரசைப் பிளந்து கட்சி அமைத்து போட்டியிட எல்லோரும் என்ன மறைந்த தலைவர் G.கருப்பையா மூப்பனாரா என்ன ?

திரு. D. சுந்தரலிங்கம்.
சுப்புலாபுரம்.

கேள்வி:-  ஐயா வரும் தேர்தலில் பி.ஜே.பி. நிலை 
இப்படி ஆகும் என்று யாராவது கருதி இருப்பார்களா ?

பதில் :-  எல்லாம் ஆண்டவன் செயல். வெறும் கை முழம் போடுமா ?  செய்றது பூராவுமே தமிழர்கள் விரோத செயல். ஜல்லிக்கட்டு விஷயம் முதல் இலங்கை பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, பாறை வாயு எடுக்கும் அந்த விஷயம் இதுபோல இன்னும் எத்தனயோ அம்புட்டு விசயத்துலேயும் கண்டும் காணாம இருந்துட்டு இப்ப தேர்தல் வரும்போது வயசான பேர்வழிகளா சினிமாத் துறையில் இருந்து இறக்குமதி செஞ்சா 
( இயக்குனர் விசு, விஜயகுமார் ) அதுவும் ஆம்பிளை ஆளாப் பாத்து இறக்கினா யாருங்க ஓட்டுப்போடுவா?ஒரு இளம் சினிமா நடிகைய களம் இறக்க வக்கு இல்லாத  கட்சி, தனக்குன்னு ஒரு தொலைகாட்சி இல்லாத தேசியக் கட்சி, இப்படி இருந்தா, நான் கேக்குறேன்,எவன் ஓட்டுப் போடுவான் ? எப்படி இவங்க டெபாசிட் வாங்க முடியும். அட..என்ன..நான்..சொல்றது ? சரிதானே.

நன்றி !!. வணக்கம் !!.

அன்புடன். TR.பாலு.